510 திரையரங்குளில் வெளியாகி 9 நாளில் மாமன்னன் செய்த மொத்த வசூல் – மேடையில் ஓப்பனாக சொன்ன உதயநிதி.

0
2764
- Advertisement -

ஒன்பது நாளில் மாமன்னன் படம் செய்திருக்கும் வசூல் வேட்டை குறித்து உதயநிதி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-
Maamannan

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கிருத்திகா உதயநிதி அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெற்றி விழா:

இந்த நிலையில் மாமன்னன் படம் வெற்றி அடைந்தது அடுத்து சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழாவை பட குழுவினர் நடத்துகிறார்கள். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், இயக்குனர் மாரி செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் கீர்த்தி சுரேஷ் கூறியது , பொதுவாகவே பெண் நடிகைகளுக்கு படங்களில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்கள். இதேபோல் வருங்காலத்திலும் பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்

படத்தின் வசூல் குறித்து சொன்னது:

இவரை அடுத்து விழாவில் உதயநிதி அவர்கள் பேசி இருந்தது, மாமன்னன் படம் தமிழகத்தில் மட்டும் 510 திரையரங்களில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வாரத்திலும் 470 திரையரங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. 9 நாட்களில் இதுவரை 52 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று சந்தோசமாக கூறியிருக்கிறார். இப்படி மாமன்னன் படத்தின் வசூல் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

Advertisement