எஸ் ஜே சூர்யாவிற்கு முன் முதலில் கமிட் ஆனது இந்த நடிகர் தானாம் (சிம்பு கூட ஏற்கனவே நடிச்சவர் தான் )

By Arun · 27/11/2021

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து மாநாடு படம் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் இயக்கி தயாரித்திருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. மேலும், படத்தில் சிம்புவிற்கு அடுத்து அதிகமாக கவர்ந்த கதாபாத்திரம் எஸ் ஜே சூர்யா தான்.

இதையும் பாருங்க : சிவா மனசுல சக்தி படத்துல ஜீவா தங்கச்சியா நடித்த பொண்ணா இது - கடற்கரையில் கொடுத்த படு கிளாமர் போஸ்.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து இருக்கிறது. அதேபோல் எஸ் ஜே சூர்யாவின் படங்களையும் ரசிகர்கள் சமீபகாலமாக விரும்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் காமெடி நடிகரே தேவையில்லை என்னும் அளவிற்கு காமெடி கலந்த வில்லத்தனத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

இந்நிலையில் மாநாடு படத்தில் வில்லனாக முதலில் நடிக்க இருந்த நடிகரின் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகர் அரவிந்த்சாமி தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். தனி ஒருவன் படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியின் வில்லத்தனத்தை பார்த்து வெங்கட்பிரபு முதலில் இந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். பின் அவரிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார். ஆனால், ஆரம்பத்தில் மாநாடு படம் எடுப்பதில் பல பிரச்சனைகள் இருந்தபோது அரவிந்த்சாமி அப்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

பின் மீண்டும் மாநாடு படத்தை இயக்கும் போது அரவிந்த்சாமி கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு பிறகு வெங்கட் பிரபு பல மொழிகளில் வில்லன்களை தேடி அலைந்து இருந்தார். பின் கடைசியாக அசோசியேட் இயக்குனர் ஒருவர் எஸ் ஜே சூர்யாவின் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார். அப்படித்தான் எஸ் ஜே சூர்யா மாநாடு படத்தில் நடித்தார். உண்மையிலேயே மாநாடு படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைய முக்கிய காரணங்களில் எஸ் ஜே சூர்யா ஒன்று சொல்லலாம். இந்த கதாபாத்திரத்தில் யாராலும் நடிக்க முடியாத அளவிற்கு எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும், அரவிந்த்சாமி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த அளவுக்கு வந்திருக்குமா? என்பதை கமெண்ட் பண்ணுங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full