தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா, அனுயா சந்தானம், சினேகா, சத்யன், ஆர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் முழு நீள காமெடி மற்றும் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவாவிற்கு நல்ல ஒரு கமர்சியல் படமாக அமைந்தது. இந்தப் படத்தில்தான் நடிகை அனுயா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொல்லப்போனால் கற்றது தமிழ் படத்திற்கு பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த ஜீவாவிற்கு இந்த படம்தான் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைந்து இருந்தது. அதிலும் இந்த படத்தில் ஜீவா பேசும் ஒரு ‘குவாட்டர் சொல்லு மச்சி’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப்படத்தில் பல்வேறு பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தாலும் இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி.
இதையும் பாருங்க : தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் திருமணம். கையில் வைக்கும் மெஹந்தி மட்டும் இத்தனை லட்சம்.
தமிழ் சினிமாவிற்கு புதிது தான். இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை. அதேபோல இந்த படத்திற்கு பின்னர் இருவரும் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை மேலும் இவர் என்னவானார் எங்கே இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
சிவா மனசுல சக்தி படத்தில் சின்னப் பெண்ணாக இருந்த இவர் தற்போது பாப். கட் மாடர்ன் லுக் என்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். மேலும் இவர் இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார் இவரது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.