தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குக்கு வர இருக்கிறது. மேலும், இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதோடு மாநாடு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எல்லாம் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதி என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ள தகவல் மாநாடு தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது.

இதையும் பாருங்க : 15 ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு பெயரில் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அக்ஷரா. (இத பத்தி ஏன் சொல்லவே இல்ல)

Advertisement

சில வருடங்களுக்கு மேலாகவே கொரோனா ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி வைத்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி வந்து உள்ளது. இதில் பல மக்கள் தடுப்பூசி போட்டும் சிலபேர் தடுப்பூசி போடாமலும் இருக்கின்றார்கள். இதனால் தடுப்பூசி போட்டால் மட்டுமே கோயில்கள், பொது இடங்களில் அனுமதி என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது திரை அரங்கிற்கு செல்ல வேண்டுமென்றால் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சினிமா துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்த தகவல் மாநாடு பட தயாரிப்பாளருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் சோசியல் மீடியாவில் டீவ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உலகத்திலேயே திரை அரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல் முறை நடக்கிறது. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்குக்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இவருடைய டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement