வெளியானது மாரி 2 படத்தின் ரிலீஸ் செய்தி..!அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட நடிகர் தனுஷ்..!

0
1785
Maari2
- Advertisement -

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “மாரி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் போன்றவர்கள் நடித்துள்ளனர். மேலும், முதல் பாகத்தில் நடித்த ரோபோ ஷங்கர் , வினோத் ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பல போஸ்டர்களும் வெளியான வண்ணம் இருந்தது.

பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தை தனுஷின் ஒண்டெர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் நடிகர் தனுஷ் மாஸ் கெட்டப்பில் இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது இந்த படத்தின் நடிகரும் தயரிப்பாளருமான தனுஷ் அறிவித்துள்ளார்.இந்த படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Advertisement