- Advertisement -
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாரி 2 ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியது. அதே போல படத்தின் பாடல்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. ஆனால், ரௌடி பேபி பாடல் மட்டும் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது.
-விளம்பரம்-
இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. யூடுயுபில் வெளியான இந்த பாடல் வெளியான 17 மணி நேரத்திலேயே ட்ரெண்டிங்கில் நம்பர் 1ல் வந்தது. அதே போல இதுவரை இந்த பாடலை 18 கோடிக்கும் அதிகமான பார்வையாலர்கள் பார்த்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் தற்போது இந்த பாடல் உலக அளவில் மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. தற்போது இந்த பாடல் வெளிநாட்டு தளம் ஒன்றில் ட்ரெண்டிங்கில் 4வது இடத்தை பிடித்துள்ளது. அதனை வண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Advertisement