கே வி ஆனந்தை தொடர்ந்து காலமான மாரி, தெறி பட நடிகர் செல்லதுரை - ஒரே நாளில் இரண்டு சோகம்.
அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரபல நடிகர் செல்லதுரை (84) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் மற்றொரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் செல்லதுரை.
இவர் தமிழில் ராஜா ராணி, தெறி, மாரி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் தெறி படத்தில் மகளை பறிகொடுத்த ஒரு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இதையும் பாருங்க : உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ஜென்டில் மேன் பட நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி.
84 வயதான இவர் உடல் நலக் குறைவால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும், இவர் சென்னை பெரியார் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் இன்று காலை இவரது வீட்டில் இருந்த கழிவறையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியாகியுள்ளார். மேலும், இவருக்கு மாறப்படைப்பு ஏற்பட்டு இருந்ததால் காலமாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/rameshlaus/status/1387988884500353024
கடந்த 17ம் தேதி நடிகர் விவேக் காலமாகி இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே போல இன்று காலை இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது நடிகர் செல்லதுரை காலமாகியுள்ளார். இப்படி அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.