குக் வித் கோமாளி பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜ் வைத்து இருக்கும் கார் பட்டியல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வித் முடிவடைந்து இருந்தது.

Advertisement

குக் வித் கோமாளி சீசன் 5:

இதனை அடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் என விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் ரங்கராஜ். இவர் ‘மாதம்பட்டி பாகசாலா’ என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை.

Advertisement

மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தொழில்:

பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார். அதற்கு பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி கொண்டு வருகிறார்.

இப்படி இவர் சமையல் நடிப்பில் கலங்கி கொண்டு வந்தாலும் இவருக்கு காரிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னிடம் எத்தனை வகையான கார்கள் இருக்கிறது என்று மாதம்படி ரங்கராஜ் கூறியிருக்கிறார். அந்த வகையில்

டாடா இண்டிகா:

Tata Indica கார் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த காரை தான் பலரும் முதலில் வாங்கி இருந்தார்கள். இது தான் மாதம்பட்டி ரங்கராஜன் வாங்கிய முதல் கார்.

ஃபோர்டு எண்டேவர்:

ஃபோர்டு நிறுவனம்(Ford Endeavour) இந்தியாவில் விற்பனையை நிறுத்திவிட்டது. இருந்தாலும் இந்த காருக்கு என்று இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் காரை மாதம்பட்டி ரங்கராஜ் பத்திரமாக வைத்திருக்கிறார்.

ஜாகுவார் எக்ஸ்எப்:

Jaguar XF தான் மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய முதல் சொகுசு கார். இப்போது இந்த கார் சுமார் 75 லட்சத்துக்கு மேல் விற்கப்படுகிறது. ஏற்கனவே இந்த காரை மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கியிருக்கிறார். ஆனால், தற்போது இந்தக் கார் அவரிடம் இல்லை.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3:

இந்த BMW X3 காரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் அடிக்கடி பயன்படுத்துகிறார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சிறந்த எஸ்யூவி கார்களில் இது ஒன்று. இதன் விலை ரூ.72.50 லட்சம்.

வால்வோ வி40:

ஹேட்ச்பேக் ரகத்தைச் சேர்ந்த வால்வோ வி40 கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது. 2019ஆம் ஆண்டில் தான் இதன் விற்பனையை நிறுத்தி விட்டார்கள். ஆனால், அதற்கு முன்பே இந்தக் காரை மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கி இருக்கிறார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ:

மெர்சிடிஸ் பென்ஸ்(Mercedes Benz GLA) நிறுவனம் மூன்று வேரியன்ட்களில் இந்தக் காரை விற்பனை செய்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.58.15 லட்சம். இந்த கார் மாதம்பட்டி ரங்கராஜ் இடம் இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்ஜே எல்:

இது தான் மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் காஸ்ட்லி கார். அவர் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த ஜாகுவார் எக்ஸ்எப் காரைக் கொடுத்து தான் இந்த ஜாகுவார் எக்ஸ்ஜே எல் 4 சீட்டர் செடான் காரை வாங்கி இருக்கிறார். இதன் விலை 1.97 கோடி ரூபாய் ஆகும்.

போர்ஷ் மேக்கன்:

இது போர்ஷ் நிறுவனத்தின் மேக்கன் 5 சீட்டர் எஸ்யூவி கார். இதன் தற்போது விலை ரூ.1.53 கோடி. இந்தக் காரையும் மாதம்பட்டி ரங்கராஜ் வைத்து இருக்கிறார்.

ரேஞ்ச்ரோவர்:

மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த டார்கெட் இந்த கார் தான். இது ரூ.3.43 கோடி விலை ஆகும். விரைவில் இந்தக் காரும் அவரது கலெக்‌ஷனில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement