தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட 18 வயது பெண்.! மாதவனின் பதிலை பாருங்க.!

0
10381
Madavan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் வித்யாசமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது அற்பிதமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நடிகர். தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B0RM8nXlKdQ/?utm_source=ig_embed

அலைபாயுதே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. இருப்பினும் அலைபாயுதே படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள் தான் அதிகம் இருந்தனர்.

இதையும் பாருங்க : நான் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டேன்.! மோகன் வைத்யா சொன்ன காரணம்.! 

- Advertisement -

மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவரை பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் 18 வயது நிரம்பிய பெண் ஒருவர் மாதவனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் இந்த வயதிலும் ஹாண்ட்ஸமாக இருக்கிறீர்கள் என்று பலரும் கமன்ட் செய்ய பெண் ஒருவர், எனக்கு 18 வயது ஆகிறது, நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் தவறா? என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

இளம் ரசிகையின் இந்த கமெண்டை கண்டு சற்றும் கோபப்படாத மாதவன், உங்களுக்கு என்னை விட ஒரு சிறந்த நபர் கவனராக அமைவார் என்று கமன்ட் செய்துள்ளார். இந்த வயதிலும் மாதவனுக்கு பெண்கள் மத்தியில் இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று வாயடைத்து உள்ளனர்.

Advertisement