மாதவன் இதுக்கு தான் பிளான் போட்றார, அதான் இப்படி பேசிக்கிட்டே இருக்கார் - ஜக்கியுடன் ஒப்பிட்டு கேலி செய்த நபருக்கு மாதவன் பதிலடி.

By Siva · 28/6/2022

ராக்கெட் லாஞ்சையும் பஞ்சாங்கத்தையும் ஒப்பிட்டு தான் பேசிய கருத்து குறித்து பலரும் கேலி செய்து வரும் நிலையில் இந்தியாவில் ட்விட்டரில் உள்ள பயனர்கள் குறித்து கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மாதவன். விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

https://twitter.com/kalkyraj/status/1539827665754288128

இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் பாருங்க : ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம். மணப்பெண் குறித்த தகவல் இதோ. திருமணம் எந்த மாதத்தில் தெரியுமா ?

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

https://twitter.com/Lollubee/status/1540760505723150336

பஞ்சாங்கம் குறித்து மாதவன் சொன்னது:

இந்த படம் ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறையில் தான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றது. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி இருந்தது என்று கூறி இருந்தார்.

https://twitter.com/srini091/status/1541637136302178304

ட்விட்டர் விமர்சங்களுக்கு மாதவன் பதிலடி :

வர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவரது பேச்சை பலர் கேலி செய்தனர. இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள மாதவன் 'இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு மேல் இருக்கின்றனர். இதில் 0.2 சதவீதத்திற்கும் கீழ் பேர் தான் ட்விட்டரில் இருக்கின்றனர். கிட்டதட்ட 25 லட்சம் பேர் தான் இருக்கின்றனர். அதில் வரும் விமர்சங்களை பற்றி கவலைப்படுகிறார்கள், சிலர் தற்கொலை கூட பண்ணிக்ககொள்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

https://twitter.com/ActorMadhavan/status/1541749800177000449

மாதவனின் பேச்சை கேலி செய்த ட்விட்டர் வாசி :

மாதவனின் இந்த கருத்தை கேலி செய்த ட்விட்டர் வாசி ஒருவர், மாதவன் தன் படத்தை விளம்பரப்படுத்த தொடர்ந்து இப்படி முட்டாள் தனமாக பேசி வருகிறார். ஆனால், அவை மேலும் சிரிப்பை தான் வரவைக்கிறது. இதை விட படத்தை விளம்பரப்படுத்த வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? என்று பதிவிட்டதோடு ஜக்கியின் வாழ்க்கை வரலாற்றில் எடுக்க மாதவன் திட்டம் போடுகிறாரோ, இவர் ஒரு தாடி வைக்காத ஜக்கி என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த மாதவன் ''நீங்கள் ஒரு விளையாட்டு வீரர், நான் தூக்கமின்றி சோர்வுடன் இருக்கிறேன். அதனால் 250 லட்சம் என்று சொல்வதற்கு பதில் 25 லட்சம் என்று சொல்லிவிட்டேன். ஆனால். 1.7 % குறைவு என்பது உண்மை தான். ஏன் இப்படி விஷமத்துடன் இருக்கிறீர்கள். அது உங்கள் விளையாட்டிற்கு நல்லதல்ல" என்று பதில் அளித்துள்ளார்.


Tamil Behind Talkies AMP · Quick view
View full