தமிழ் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யானுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.
ஆனால், இதில் எந்த திரைப்படமும் ஹரிஷ் கல்யாணுக்கு எந்த ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி தரவில்லை. அதன் பிறகு இவர் தமிழ் திரையுலகுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து தெலுங்கு திரையுலகிலும் நுழைந்து இருந்தார். அதில் ‘ஜெய் ஸ்ரீ ராம், காதலி, ஜெர்சி’ ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார் ஹரிஷ் கல்யாண். இருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹரிஷ்:
பின் 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.
ஹரிஷ் நடித்த படங்கள்:
அதன் பின் நடிகர் ஹரிஷ் கல்யான்,விவேக் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தாராள பிரபு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து இருந்தார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குராரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு”. இந்த படத்தைதமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி இருந்தார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் படம் வெளியாகி இருந்தது.இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’.
ஹரிஷ் நடிக்கும் படங்கள்:
இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கி இருந்தார். இந்த படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தற்போது இவர் நூறுகோடி வானவில், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யானுக்கு கூடிய விரைவில் திருமணம் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஹரீஸ் கல்யாண் திருமணம் குறித்த தகவல்:
அதாவது, ஹரீஸ் கல்யாணின் பெற்றோர்கள் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் ஹரிஸ் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தனக்கு பொருத்தமான பெண் தேடும் பொறுப்பை ஹரிஸ் கல்யாண் தன்னுடைய பெற்றோரிடமே முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.