ஆன்லைன் சூதாட்ட விவாகரத்தில் தமன்னா உட்பட விராட் கோலி, பிரகாஷ்ராஜ் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் ரம்மி விளையாட பணத்தை தோற்ற இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை அமஞ்சிக்கரை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர், தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக கல்லூரி இல்லாததால் டாட்டூ கடையில் பணிபுரிந்து வந்து இருக்கிறார்.

மேலும், ஆன்லைனில் ரம்மி விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துவந்திருக்கிறார். ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தனது பணம் அனைத்தையும் இழுந்துள்ள அந்த இளைஞர், தான் பணியாற்றி வந்த டாட்டூ கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து ரம்மி விளையாட்டில் தோற்றுள்ளார். பணத்தை இழந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

Advertisement

இதனால் அந்த இளைஞர் தான் பணியாற்றி வந்த டாட்டூ கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் ஆன்லைனில் விளையாட்டில் பணம் தோற்றது தான் என்றும் அவர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் தற்போது எக்கச்சக்கமான ரம்மி விளையாட்டு செயலிகள் இருக்கிறது இப்படி ஒரு நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட இருவரையும் கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு,” விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Advertisement
Advertisement