ரஜினிக்கும் – விஜய்க்கும் இதான் பிரச்சனை. முதன் முறையாக சொன்ன ரஜியின் உறவினர் மதுவந்தி

0
452
- Advertisement -

ரஜினிக்கும்- விஜய்க்கும் இடையே இருக்கும் பிரச்சனை குறித்து முதன் முறையாக ரஜினியின் உறவினர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

பின் ஜெயிலர் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியிருந்த காக்கா- கழுகு கதை தான் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. இது குறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை கொடுத்து விடுகிறார்கள். பலர் ரஜினிகாந்திற்கு ஆதரவாகவும், பலர் விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இதை சோசியல் மீடியாவில் பனிப்போராகவே ஆக்கிவிட்டார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் அவர்கள் வழக்கம் போல் குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என்று காடு, முயல், யானை என்று சொல்லியிருந்தார். இறுதியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மதுவந்தி கூறியிருப்பது, பொதுவாகவே சக்சஸ் மீட் என்பது அந்த படத்தில் பணி புரிந்த கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்வார்கள்.

மதுவந்தி பேட்டி:

ஆனால், லியோ பட சக்சஸ் மீட்டில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விஜய்யை மட்டுமே புகழ்ந்து பேசி இருந்தார்கள். அதேபோல் எல்லாரும் காக்கா -கழுகு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொல்லும் போதே நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. இது ஒரு யதார்த்தமான கதை என்று கூறியிருந்தார். அப்படி அவர் சொல்லியும் பலரும் யாரு காக்கா? யாரு கழுகு? என்று விவாதிக்க தொடங்கி விட்டார்கள்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

மேலும், லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் காட்டுக்குள் யானை, முயல் கதை சொல்லி யார் பெரிய ஆள் தெரியுமா? என்றெல்லாம் பேசி இருக்கிறார். இறுதியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கே சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியும் போது எதற்கு இந்த ஒப்பீடு. தேவையில்லாமல் விமர்சனங்கள் எதற்கு? எத்தனையோ மேடைகளில் அவருடைய காலில் விழுந்து விஜய் விழுந்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது எதற்காக இந்த ஒப்பீடு. அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம்.

மதுவந்தி குறித்த தகவல்:

சூப்பர் ஸ்டாருக்கு என்றும் சூப்பர் ஸ்டார் தான் நிகர். அவருடைய இடத்தை யாராலுமே பிடிக்க முடியாது. என்று கடுமையாக விஜயை விமர்சித்து பேசி இருக்கிறார் மதுவந்தி. தற்போது இவர் பேசி இருக்கும் வீடியோ தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி. இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ரஜினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement