மெட்ராஸ் பட நடிகர் கலையரசனுக்கு இவ்வளவு பெரிய மகளா.! புகைப்படம் இதோ.!

0
2404
KALAIYARASAN
- Advertisement -

தமிழில் பல குணச்சித்தர நடிகர்கள் மத்தியில் தனது சிறப்பான நடிப்பு மூலம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கலையரசன். பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தலாலா ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் முகமூடி, அட்டகத்தி, மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மெட்ராஸ் படம் தான்.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் கலையரசன். இறுதியாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 4 படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் கலையரசன் திரைப்படத்தில் நடிக்க வரும் முன்பாக கணினி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல தகவல் தொழில் நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஷண்முக பிரியா என்பவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement