மகாநதி சீரியல் ஆனது ஜனவரி மாதத்தில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதில் சந்தானம் என்கிற கதாபாத்திரம் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார் அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும் கடைசி மகள் நர்மதா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இந்தத் தொடரில் நிவின் என்னும் கதாபாத்திரம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு வருகை தருக்கின்றார்.

அங்கு காவிரியை பார்த்தவுடன் நிவின் காதல் வயப்படுகிறான். அவர்கள் இருவருக்கும் காதல் மலர்வது ஒரு பக்கமாக இருக்கின்றது. மற்றொரு பக்கம் துபாயில் வேலை செய்யும் சந்தானம் தன் மூத்த மகள் கங்காவின் நிச்சயததிற்காக உயிர் நண்பன் பசுபதியை நேரில் சந்தித்து வங்கியில் தான் செலுத்த சொல்லிக் கொடுத்திருந்த பணத்தை எடுத்து தருமாறு சந்தானம் பசுபதி இடம் கூறுகிறார். அதற்கு பசுபதி அந்த பணம் முழுவதும் தனது நிலத்தை ரிஜிஸ்டர் செய்வதற்கு சரியாக இருந்ததாகவும் வங்கியில் வேறு பணம் இல்லை என்றும் அவர் கூறவே அதிர்ச்சி அடைந்த சந்தானம் தூக்கத்திலேயே இறப்பது போன்று கதைகளும் நகர்ந்து வந்தது.

Advertisement

அப்பாவின் திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நிச்சயதார்த்தத்தை பற்றி ஊரே பேச வேறு வழி இல்லாமல் கங்கா பிடிக்காத குமரனை திருமணம் செய்து கொள்கிறாள். அதன் பின்பு தான் தன்னுடைய அப்பா சந்தானம் அவரது நண்பருக்கு கொடுத்த பணம் பற்றி காவேரி அனைத்தையும் தெரிந்து கொள்கிறாள். இதை பற்றி தெரிந்து கொண்ட பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனால் நிவினும் காவிரியும் பசுபதி உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலபடுத்தி காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் தான் கடைசி மகள் நர்மதாவுக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அந்த அவருக்கு நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை உருவாகிய காரணத்தினால் அவர்கள் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்கள். காவிரி தன்னை அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தியதாக எண்ணி பசுபதி அவர்களும் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது போல கதை நகர்கிறது. சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள்.

Advertisement

அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய் அவரும் பசுபதிவிடும் சண்டை இட்டு காவிரி குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கின்றார். பசுபதி இடமிருந்து பணத்தை வாங்கி குமரனின் அக்கவுண்ட் கணக்கில் செலுத்த சென்ற போது அந்த பணம் யாரும் எதிர்பாராதவிதமாக தொலைந்து போகின்றது. இதனால் நர்மதாவும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்ற விஜய் திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள்.

Advertisement

இதனைப் பார்த்து விஜய் வீட்டார் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். நிவின் இரண்டாவது மகள் ராகினியை திருமணம் செய்து கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் நிவின் யாரையும் திருமணம் செய்யாமல் இருப்பது காவிரிக்கு தெரிய வந்தது அவளுக்கும் பெரும் வலியாக இருக்கின்றது. இந்நிலையில் நிவின் மற்றும் காவிரி இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியை நடைபெறுகிறது.

அதில் நிவின் கலந்து கொள்கிறார் அப்பொழுது குழப்பங்கள் ஏற்படுமா என்று மக்களின் மனதில் பல கேள்விகளை எழுந்து வருகின்றது. இந்த நிலையில் மகாநதி தொடர் குறித்து கருத்து தெரிவித்து வந்த மக்கள் காவேரி நிவின் ஜோடி தான் நன்றாக இருந்தது விஜய் காவிரியின் ஜோடி திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிவினும் காவிரியும் இணைந்து இருக்கலாம் என்றும் அவர்களது கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள்.

Advertisement