மீண்டும் நிவின் மீது சந்தேகப்பட்டு சண்டை போடும் யமுனா, கோபத்தில் கங்கா - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? இந்த சொத்து, நாங்கள் எதுவுமே முக்கியமில்லையா? அவள் இந்த வீட்டுக்கு வந்தால் நாங்கள் வெளியே போறோம் என்றார். அதற்கு விஜய், காவிரி உடன் இருந்தால் இதைவிட பல மடங்கு சொத்தை நான் சேர்த்து விடுவேன். நான் அப்பாவாக போறேன். இதை தான் உங்களிடம் சொல்வதாக இருந்தேன் என்றார். உடனே தாத்தா, நீ காவிரியை வீட்டுக்கு அழைத்து வா என்றார். அதற்கு விஜய், இப்போது காவிரி இங்கு வந்தால் மரியாதையாக இருக்காது. நான் காவிரியை மரியாதையாக நடத்த வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினார்.
காவிரியின் வீட்டிற்கு வந்த விஜய், தன்னுடைய பாட்டி- சித்தி பேசிய விஷயத்தை சொன்னார். அதைக் கேட்டு காவிரியின் குடும்பம் ஷாக் ஆனது. பின் விஜய், என்னுடைய துணி, படிப்போடு மட்டும் இங்கு வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வீர்களா? எனக்கு சொத்தை விட காவிரி தான் முக்கியம். அவளுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாக இருப்பதால் சாரதா, விஜய் -காவிரி இருவரையும் ஏற்றுக் கொண்டார்.
மகாநதி:
நேற்று எபிசொட்டில் காவிரியின் அம்மா, விஜய்க்கு பார்த்து பார்த்து சாப்பாடுகளை செய்தார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு சென்ற குமரன், காவிரி- விஜய் சேர்ந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். இதைக் கேட்டு யமுனாவுக்கு ஷாக் ஆனது. அதற்குப்பின் காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த யமுனா வீட்டிற்கு வந்தார். அப்போது காவிரியை கட்டி பிடித்து யமுனா சந்தோஷப்பட்டார். ஆனால், காவிரி அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருக்குமே தடபுடலாக விருந்துகளை காவிரியின் அம்மா பரிமாறினார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மொட்டை மாடியில் மூன்று ஜோடிகள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது
யமுனா, எல்லாத்துக்குமே சாரி. நான் தான் கேவலமானவள் என்றெல்லாம் சொன்னார். யமுனா திரிந்து விட்டால் என்று எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நிவின், அவள் திருந்த மாட்டாள் என்று உள்ளுக்குள் நினைக்கிறார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமான விஷயத்தை முதலில் நிவினுக்கு தான் தெரியும் என்று சொன்னவுடன் வழக்கம் போல் மீண்டும் யமுனா சந்தேகப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், குமரன், நிவின் மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சாரதா, காவிரியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு பார்த்து பார்த்து செய்கிறார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அதோடு தூங்கும் ரூமை கூட இருவருக்கும் வித்தியாசமாக பார்த்து கொடுக்கிறார். அதற்குப்பின் நிவின் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். குமரன், விஜய் இருவருமே குடித்துவிட்டு கொஞ்சம் ஜாலியாக அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது விஜய், எங்களுக்காக ஸ்பெஷல் ஆக தயார் செய்ய வேண்டாம். நீங்கள் எப்போதும் போல இருங்கள். எங்களுக்காக யாரும் உங்களின் ப்ரைவேசி விட வேண்டாம் என்று சொல்லி விஜய் குடியிருந்த போர்சனுக்கே இருவரும் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு வந்த உடனே வழக்கம்போல சண்டை வாங்க யமுனா காத்துக் கொண்டிருந்தார். அப்போது யமுனா, காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்களுக்கு எப்படி முதலில் தெரியும். நீங்கள் ஏன் குமரன் மாமாவிடம் சொல்லவில்லை என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு நிவின், என்னைக்கும் நீ திருந்த மாட்ட. உன்னிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு செல்கிறார். இதனால் யமுனாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகிறது.