விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, வேலைக்குப் போன விஷயத்தைப் பற்றி கேட்டார். அதற்கு விஜய், வேறு இடம் எங்காவது பார்க்கலாம் என்றார். உடனே காவிரி, புது பிசினஸ் தொடங்கலாம். அதற்கான பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஆனால், விஜய் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த சமயம் வந்த குமரன், கங்கா என்னை ரொம்ப டார்ச்சல் செய்தார். அடிக்கிறார், உதைக்கிறார் என்றெல்லாம் புலம்பினார். உடனே விஜய், காவிரியுமே அப்படிதான் ரொம்ப கொடூரமாக என்னை நடத்துவாள் என்றெல்லாம் புலம்பினார்.

மறுநாள் விஜய்யை பார்ப்பதற்காக அவருடைய தாத்தா- பாட்டி இருவரும் வந்திருந்தார்கள். பாட்டி, காவிரி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. வழக்கம் போல காவிரியை குறை சொல்லிக் கொண்டே தான் இருந்தார். பின் தாத்தா, காவிரிக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார். வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்றார்கள். பின் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? நாங்கள் இல்லையா? என்றெல்லாம் வழக்கம் போல காவிரியை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், தன் பாட்டியை சமாதானம் செய்ய நினைத்தார். ஆனால், அவர் கேட்கவில்லை.
மகாநதி:
வளைகாப்பிற்கு தேவையான பொருட்களை எல்லாம் தாத்தா, பாட்டி வாங்கி வந்து காவிரியின் வீட்டில் வைத்துவிட்டு சென்றார்கள். அந்த சமயம் வந்த கங்காவிடம் சாரதா, விஜய் பாட்டி வந்து போன விஷயத்தை எல்லாம் சொன்னார். உடனே கங்கா, எனக்கு வளைகாப்பு இல்லையா? என்றார். சாரதா, உனக்கு ஏழாம் மாதம் நடத்துகிறோம். இரண்டு பேருக்கும் சேர்ந்து நடத்துகிறோம் என்றார். ஆனால், கங்கா ஒத்துக் கொள்ளவே இல்லை. எனக்கு ஐந்தாம் மாதமே நடத்த வேண்டும். இல்லை என்றால் வளைகாப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் கடையில் கங்கா வளைகாப்பு நினைத்து கோபமாக இருந்தார். அந்த சமயம் வந்த யமுனாவிடம் வீட்டில் வளைகாப்பு பற்றி பேசிய விஷயத்தை எல்லாம் கங்கா சொன்னார். யமுனா, வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் காவிரி -விஜய் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரிக்காக வாங்கி வைத்த முருகர் செயினை விஜய் போட்டு விட்டார். இன்னொரு பக்கம் கங்கா கோபமாக இருந்தார். குமரன் எவ்வளவோ சமாதானம் செய்துமே கங்கா கேட்கவில்லை.
https://www.youtube.com/watch?v=EN2esauuiZQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கங்கா, தன்னுடைய வளைகாப்பை சிறப்பாக நடத்த வேண்டும் என்று வருத்தப்படுக்கிறார். அப்போது குமரன், உனக்கு என்ன நகை வேண்டும்? என்று கேட்கிறார். அதற்கு கங்கா, எனக்கு ஒட்டியானம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அது வாங்க ரொம்ப காசு வேண்டும். வளைகாப்பிற்கு நிறைய செலவாகும் என்றெல்லாம் சொல்கிறார். அந்த சமயம் பார்த்து குமரனுக்கு ஒரு புது பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதற்காக கடுமையாக உழைக்கிறார் குமரன். விஜய், நிவின் இருவருமே சப்போர்ட் செய்கிறார்கள்.






