விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் பாட்டி, எந்த பிரச்சனை என்றாலும் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டில் சத்தம் போடாதீர்கள் என்று காவேரி குடும்பத்தை மோசமாக பேசினார். இதனால் கங்காவிற்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்ப பார்த்தார். உடனே விஜய் அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி முத்து மலர் மகனை தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது முத்து மலர் மகன், எனக்கு வேறு வழி இல்லை. நான் செத்தப்பிறகாவது சொத்தில் பங்கு என் வீட்டிற்கு கொடுப்பீர்களா? எனக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்றார்.

இதை கேட்டு விஜய் மனம் மாறி, ஒருநாள் டைம் தருகிறேன். அதற்குள் எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பி விடனும். தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்றெல்லாம் சொன்னார்.
பின் விஜய், தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் முத்து மலர் குடும்பம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதியும் வாங்கி கொண்டார். இதைப் பற்றி விஜய், காவிரியிடம் சொன்னார். சாரதா கோவப்பட்டு சண்டை போட்டார்.
மகாநதி:
விஜய், சாரதா குடும்பத்தை சமாதானம் செய்து வீட்டிற்குள் அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாட்டி, தாத்தா, சித்தி எல்லோருமே விஜய்க்காக காவிரியின் குடும்ப பிரச்சனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜய், எல்லோரையும் சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால் பாட்டி- சித்தி இருவரும் மாறி மாறி காவிரி குடும்பத்தை பற்றி மோசமாக பேசி விட்டார்கள். பின் விஜய், காவிரி- சாரதா பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். எல்லோரையும் சமாதானம் செய்ய பார்த்தார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாமல் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு விஜய், நாம் இருவரும் கணவன்- மனைவி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கலாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு. இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி காவிரியை சமாதானம் செய்து தூங்க வைத்தார்.
https://www.youtube.com/watch?v=lOyI-S5Bbgs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் காவிரி, சாரதா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த முத்துமலர், சாரதாவை பார்த்து அக்கா என்று கூப்பிடுகிறார். கோபத்தில் சாரதா, யாரடி அக்கா என்று சொல்கிறாய்? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் குரங்கு மாதிரி வெப்பாட்டி வைப்பார்களாம். உன்னிடம் என்ன இருக்கு என்று தெரியவில்லை. அந்த ஆளு உன்னிடம் என்ன பார்த்தான் என்று ரொம்ப மோசமாக முத்துமலரை பேசுகிறார்.






