விஜய் - காவிரியிடம் மன்னிப்பு கேட்ட யமுனா, சந்தேகப்படும் நிவின், அடுத்து என்ன? மகாநதி

By subhashini · 3/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பாட்டி, சித்தி செய்த வேலையை நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் விஜய், வீட்டில் சரி செய்துவிட்டு நான் காவிரியை அழைத்து செல்கிறேன் என்று அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்து தாத்தா கோபப்பட்டு சண்டை போட்டார். அந்த சமயம் வந்த விஜய், தன்னுடைய சித்தப்பாவை பார்த்து அவரை அடித்து வெளியே அனுப்பினார்.

உடனே பாட்டி, சித்தி இருவருமே விஜய்யை தடுத்து மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். அப்போது விஜய், எல்லோருமே என் முதுகில் குத்துகிறார்கள் என்றார். பின் காவிரி இடம் விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி விஜய் கேட்டார். கோபத்தில் பாட்டி, ஆமாம் நான்தான் அதை சொன்னேன். உன் வாழ்க்கை சீரழிவுதே என்னால் பார்க்க முடியாது என்றார். உடனே விஜய், நான் காவிரி விவாகரத்து கொடுத்தாலும் நான் கொடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று கோபப்பட்டு பேசி இருந்தார்.

மகாநதி:

பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? இந்த சொத்து, நாங்கள் எதுவுமே முக்கியமில்லையா? அவள் இந்த வீட்டுக்கு வந்தால் நாங்கள் வெளியே போறோம் என்றார். அதற்கு விஜய், காவிரி உடன் இருந்தால் இதைவிட பல மடங்கு சொத்தை நான் சேர்த்து விடுவேன். நான் அப்பாவாக போறேன். இதை தான் உங்களிடம் சொல்வதாக இருந்தேன் என்றார். உடனே தாத்தா, நீ காவிரியை வீட்டுக்கு அழைத்து வா என்றார். அதற்கு விஜய், இப்போது காவிரி இங்கு வந்தால் மரியாதையாக இருக்காது. நான் காவிரியை மரியாதையாக நடத்த வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் காவிரியின் வீட்டிற்கு வந்த விஜய், தன்னுடைய பாட்டி- சித்தி பேசிய விஷயத்தை சொன்னார். அதைக் கேட்டு காவிரியின் குடும்பம் ஷாக் ஆனது. பின் விஜய், என்னுடைய துணி, படிப்போடு மட்டும் இங்கு வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வீர்களா? எனக்கு சொத்தை விட காவிரி தான் முக்கியம். அவளுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாக இருப்பதால் சாரதா, விஜய் -காவிரி இருவரையும் ஏற்றுக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் காவிரியின் அம்மா, விஜய்க்கு பார்த்து பார்த்து சாப்பாடுகளை செய்கிறார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு சென்ற குமரன், காவிரி- விஜய் சேர்ந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறார். இதைக் கேட்டு யமுனாவுக்கு ஷாக் ஆகிறது. அதற்குப்பின் காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த யமுனா வீட்டிற்கு வருகிறார். அப்போது காவிரியை கட்டி பிடித்து யமுனா சந்தோஷப்படுகிறார். ஆனால், காவிரி அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருக்குமே தடபுடலாக விருந்துகளை காவிரியின் அம்மா பரிமாறுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மொட்டை மாடியில் மூன்று ஜோடிகள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது
யமுனா, எல்லாத்துக்குமே சாரி. நான் தான் கேவலமானவள் என்றெல்லாம் சொல்கிறார். யமுனா திரிந்து விட்டால் என்று எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். நிவின், அவள் திருந்த மாட்டாள் என்று உள்ளுக்குள் நினைக்கிறார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமான விஷயத்தை முதலில் நிவினுக்கு தான் தெரியும் என்று சொன்னவுடன் வழக்கம் போல் மீண்டும் யமுனா சந்தேகப்படுகிறார். இதனால் உள்ளுக்குள் நிவின் கோப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full