விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த கால்பந்தாட்ட கோச்.! இவரும் நடிகர் தான்.!

0
1364
Bigil
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் வருகிறது.

-விளம்பரம்-
Bigil

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் யோகி பாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துவருகின்றனர். அதேபோல இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பணிபுரிந்து வருகிறார் மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் கால்பந்தாட்ட பயிற்சிலாளராக விஜயன் என்பவர் இணைந்துள்ளராம்.

விஜயன் வேறு யாரும் இல்லை, இவர் முன்னாள் தமிழக கால்பந்து அணியின் கேப்டன் ஆவர். மேலும், நடிகர் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், கெத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் இவர், அப்பா கதாபாத்திரத்துடன் படம் முலுவதும் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement