இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பேபி தித்யா ஒரு சிறுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்தியில் நடனத்தை மையப்படுத்தி பிரபுதேவா நடிப்பில் வெளியான 'ஏபிசிடி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'லட்சுமி ' படமும் நடனத்தை மையமாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=byqcMgV-Mtw
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மொத்தம் 12 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.




