மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாளவித்தம் மோகன். இவர் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தின் நடித்திருந்தார்.அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள்.

ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலம் கூடியது.

Advertisement

தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையா மையமாக கொடு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இடபமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி வருகிறது. இப்படம் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் “யுத்ரா” என்ற படத்திலும் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் சினிமாவில் ஆரம்பான புதியத்திலேயே நடிகைகளுக்கு ஏற்ற உடல் வாகுடன் தான் அறிமகமானார். ஆனால், சமீப காலமாக இவர் தனது உடல் எடையை மேலும் குறைத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாளவிகா மோகனன் ‘தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு பைட்டரை போன்றது. அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான உடல் அமைப்புக்காக நான் தற்போது உடல் எடையை குறைத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

இந்த படத்தில் இருந்து கதாநாயகி விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதாவது, இந்த படத்தில் இவருடைய நடிப்பு சரியில்லாத காரணத்தினால் தான் படத்திலிருந்து இவரை இயக்குனர் பா ரஞ்சித் நீக்க இருப்பதாக கூறப்பட்டது. அதோடு பா.ரஞ்சித் எதிர்பார்த்த அளவிற்கு மாளவிகா மோகனன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், மாளவிகா மோகனின் இந்த வீடியோ தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

Advertisement

தங்கலான் திரைப்படம் தங்கம் சுரங்கத்தை மையமாக வைத்து எடுப்பதாகவும் ரஞ்சித் கூறியிருந்தார். அதனால் தங்கத்தை தோண்டி எடுப்பது, அதற்கான நிலப்பகுதிகள் யாருக்கு சொந்தம் என்ற அடிப்படையில் பூர்வ குடிகள் தலித் சமூகம் தான் என்று திரைக்கதையில் முன்னிறுத்தப்படுமா? ஆங்கிலேயர்கள் எதிராக போராடியவர்களுக்கு தலைமை தாங்கியது தலித் சமூகர்கள் தான் முன்மொழிவார்களா? என்ற விவாதங்கள் தொடரப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement