லேசா லேசா பட நடிகர் சீனுவாசன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

0
927
Malayala-Actor-Srinivasan
- Advertisement -

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் ஆபத்தான நிலையில் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் இயக்குனர், தயாரிப்பாளர். எழுத்தாளர், நடிகர் என்று பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கி வருகிறார்.

-விளம்பரம்-

மலையாளத்தில் இதுவரை 200 திரைப்படத்தில் நடித்த இவர் தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘புள்ளகுட்டிக்காரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். கடைசியாக மலையாளத்தில் ‘ஞான் பிரகாஷன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ரீனிவாசன் சமீபத்தில் ஒரு படத்தின் டப்பிங் வேலையில் ஈட்டுபட்டிருந்த போது அவருக்கு திடீரென்று மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை எர்ணாகுளம் மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை சார்பாக தெரிவிக்கையில், ஸ்ரீநிவாசன் உடல் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு இன்னும் மூச்சி திணறல் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார் விரைவில் உடல் நலம் தேறி வருவார் என்று நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement