40 வயதிலும் படுக்கை அறையில், இப்படி ஒரு உடையில் போஸ் தேவையா.! மல்லிகா ஷராவத்.!

0
849
Mallika-sharawat
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும்பாலும் இந்தியில் நடித்து வரும் பல நடிகைகளைப் பற்றி அறிந்திருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். இவர் இந்தியில் வெளியான ‘மர்டர்’ படத்தின் மூலம் இந்தி சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் படு பிரபலம் அடைந்தார்.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது 2004 ஆம் ஆண்டு வெளியான மர்டர் திரைப்படம் தான். இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் அடைந்தார்.

- Advertisement -

இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார்.

-விளம்பரம்-

இந்தியில் படு பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். இறுதியாக இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஜீனத்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய இவர், தற்போது சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் இவர் படுக்கையறையில் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர, 42 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவை என்று பலரும் இவரை விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர்

Advertisement