மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவர் நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவைகள் வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று இருக்கிறார். இவர் 450 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் மொழியிலும் நடித்து இருக்கிறார். அதோட இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மம்முட்டி- மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ரியாட். இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கி இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. அப்போது விழாவில் யூத் பட நடிகர் சின்ன தமிழா குறித்து மம்மூட்டி பேசிய விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மம்முட்டி குறித்த தகவல்:
அதில், நான் யூத் படத்தினுடைய வெற்றி விழா வீடியோவை பார்த்தேன். அதில் சின்ன தமிழா பேசும் போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காதது என்று பலரும் நினைத்த நிலையில் இன்று அவர் அடைந்திருக்கும் இடம் ரொம்பவே பெரிது. நாங்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்த பிறகுதான் நடிப்பை கற்றுக் கொண்டோம். ஆனால், அந்த சிறுவனுக்கு நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் இருக்கும் அந்த ஆசை தேடல் எப்போதும் எனக்குள் இருக்கிறது. அவனுக்கு எந்த அளவு சினிமா ஆசை இருக்கிறதோ அதே அளவு ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறுகிறார்.

விழாவில் மம்மூட்டி:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார்.

சின்ன தமிழா பற்றி சொன்னது:
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் முக்கிய ரோலில் சின்ன தமிழா நடித்து இருந்தார்.






