நயன்தாராவால் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் – விஷால் பட நடிகை பகிர் தகவல்.

0
453
nayanthara
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நயன்தாராவால் நான் இழந்தேன் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் ஆவது பணியாற்ற வேண்டும் என்று நடிகர்கள், இயக்குனர்கள் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குசேலன் படம்:

அந்த வகையில் ரஜினிகாந்த் உடன் நடிக்க இருந்த வாய்ப்பை நயன்தாராவால் இழந்துவிட்டேன் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் அதிர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, பசுபதி, மீனா, பிரபு, சந்தானம், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலாக வந்திருப்பார்.

-விளம்பரம்-

ரஜினி பட வாய்ப்பு இழந்த காரணம்:

அதேபோல் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை மம்தா மோகன் தாசும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோயினி தேவையில்லை என்று நயன்தாரா அவர்கள் படக்குழுவினரிடம் கூறியதால் அந்த படத்தில் இருந்து மம்தா மோகன் தாஸ் நீக்கி இருக்கிறார்கள். இதை சமீபத்தில் அவரே பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அருந்ததி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது மம்தா தானாம்.

மம்தா மோகன்தாஸ் குறித்த தகவல்:

ஆனால், அப்போது தெலுங்கு திரையுலகிற்கு இவர் புதிது என்பதால் அந்த படத்தில் நடிக்க பயந்து மறுத்திருக்கிறார். தற்போது இதை நினைத்து அவர் வருத்தப்பட்டாராம். தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் நடிகை மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியும் ஆவார். இவர் மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவுலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement