பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட சிறுவர்களை சமூக வலைதளத்தில் மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். ஒவ்வொரு சேனலும் தன்னுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக புத்தம் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

பெரும்பாலும் சேனல்களில் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சியை என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் குழந்தைகள் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். இது எல்லா சேனல்களிலும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் ஒளிபரப்பாகும் சேனல்களில் ஜீ தமிழ் மிகப்பிரபலமான சேனல்.

Advertisement

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

இந்த சேனலில் சீரியல் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குழந்தைகளுக்கான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் நடுவராக சினேகா, மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடுவராக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் புலிகேசி என்ற தலைப்பில் நடத்திய நாடகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

மோடி குறித்து எழுந்த சர்ச்சை :

அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி பாஜக கும்பல், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறையில் புகார் அளித்து தொலைக்காட்சிக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் கெட்டப்பில் சிறுவர்கள் நடித்து இருந்தார்கள். அப்போது பெரியார் கருத்தை, பெண்விடுதலை, பெரியார் கடவுளை ஏன் எதிர்த்தார்? மதத்தை தூக்கி எறிய சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சிறுவர்கள் நாடக வடிவில் பேசி மக்களின் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

Advertisement

குறிப்பாக பெரியாரின் வேடமணிந்த சிறுவர், கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமாக நடத்துவது மட்டுமே தான் என்னுடைய எண்ணம் போன்ற வசனங்கள் எல்லாம் பேசி இருந்தார். அதேபோல் பெண்ணின் அடிமைத்தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளையும் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் சமுதாய விழிப்புணர்வு குறித்த நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் எல்லோரையும் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement

பெரியார் வேடமிட்ட சிறுவர்கள் :

இப்படி ஒரு நிலையில் பெரியார் வேடமிட்ட குழந்தைகல் குறித்து மிரட்டும் தொணியில் முகநூல் பக்கத்தில் பெரியார் வேஷம் போட்ட குழந்தையை அடித்தே கொன்று நாலுமுக்கு ரோட்டில் தூக்கில் தொங்க விட வேண்டும், அப்போதுதான் மற்ற குழந்தைகளுக்கும் அதன் பெற்றோருக்கும் பயம் வரும் ஏன் வவுசி தேவர், பாரதி, நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதோ என்று கூறி குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவு பலரின் கண்டனத்தை பெற்றது.

மேலும், இவரை கைது செய்ய வேண்டும் என்று பலர் புகார் அளித்த நிலையில் தற்போது இவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது 100/22 U/s ,153A ,506(1) , IPC SEC 67 IT ACT இந்த அனைத்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement