விஜய் சேதுபதி மகள் குறித்து ட்விட்டரில் அவதூறாக பேசிய நபர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தார். 800 என்று தலைப்பை கொண்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதே போல பாரதி ராஜா, அகத்தியன், சேரன், சீனு ராமசாமி என்று பல்வேறு இயக்குனர் கூட விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முத்தையா முரளிதரன் கூட விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கைக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “நன்றி.. வணக்கம்” எனக் கூறி இருந்தார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘அந்த படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது’ என்று கூறி இருந்தார் விஜய் சேதுபதி.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக என்னை சமூக வலைதளத்தில் ஒரு மர்ம நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து இருந்தார். சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் பலர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே போல பல்வேறு திரை துறை பிரபலங்களும் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படி ஓரு நிலையில்  அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.

விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறாக பேசிய நபர் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். கொரோனாவால் எனக்கு வேலை போய்விட்டது.அந்த கோபத்தில் இப்படி நான் பதிவிட்டு விட்டேன். இதற்காக விஜய் சேதுபதி, அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Advertisement
Advertisement