மனதை திருடிவிட்டாய் படத்தில் வந்த ப்ரூஸா இது ? வைரலாகும் புகைப்படம் .

0
8533
- Advertisement -

பொதுவாகவே சில நடிகைகள் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாக மாட்டார்கள். ஆனால், சில நடிகைகள் ஒரே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் காலம் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மனதை திருடியவர் தான் நடிகை ப்ரூஸ். தமிழ் சினிமா உலகில் அறிமுக இயக்குனர் ஆர் டி நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
மனதை திருடி விட்டாய் "ப்ரூஸ்" என்ன ஆனார்..? - இப்போது எப்படி இருக்கிறார்  பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..! - Tamizhakam

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பசங்களை தன் பின்னால் அலைய விட்டவர் தான் ப்ரூஸ். இந்த படத்தில் வளையாபதி கதாபாத்திரத்தில் விவேக்கும், ஸ்டீவ் வாக் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலும் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : 90ஸ் நடிகை கௌசல்யாவை இதுவரை குடும்ப குத்துவிளக்கா மட்டும் தான பார்த்திருக்கீங்க. இப்படி ஒரு உடையில் பார்த்திருக்கீங்களா ?

- Advertisement -

இந்த படத்தில் இவர்கள் இருவரையும் ப்ரூஸ் தன் பின்னே அலைய விடும் அலப்பறைகள் பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. கடைசியில் வளையாபதி(விவேக்) ப்ரூஸ்ஸை உஷார் செய்து திருமணம் செய்து விடுவார். ஆனால், ப்ரூஸ்க்கு இருப்பது கட்டைக் கால் என்ற ட்விஸ்டீ படத்தின் ஹைலைட்டாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தில் வடிவேலு, விவேக் செய்யும் அட்ராசிட்டி அளவே இல்லாமல் இருக்கும்.

This image has an empty alt attribute; its file name is 1-4.jpg

மேலும், ப்ரூஸ்ஸின் உண்மையான பெயர் என்ன என்று தெரியவில்லை.இந்த படத்திற்கு பிறகு இவர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்துள்ளார். தற்போது இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் ப்ரூஸ்ஸின் புகைப்படம் என்று ஒரு தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே இது தான் ப்ரூஸ்சா?? இல்லை வேறு யாராவதா என்று ஷாக்காகி கிடக்கிறார்கள் தமிழ் இளைஞர்கள்.

-விளம்பரம்-
Advertisement