144 தடை உத்தரவால் சென்னை திரும்ப முடியாமல் இருக்கும் மணைமேகளை.

By Rajkumar · 23/3/2020

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் தான் தலைவிரித்து ஆடி வருகிறது. னாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த வைரஸ் உருவான சீனாவில் இந்த வைரஸின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக சீனாவில் யாரும் புதிதாக இந்த கொரானா வைரசால் பாதிக்கபடவில்லை என்று சீன அரசு அறிவித்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

https://www.instagram.com/p/B98pEN8H1eH/

தற்போது சீனாவிலும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளது. சீனாவை போல மற்ற நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் மிக மோசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 14 ஆயிரம் பேர் இந்த கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த கொரோனா வைரசின் தக்கம் இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதையும் பாருங்க : தவறி விழுந்த கலைஞர் தாங்கி பிடித்த தளபதி. வைரலாகும் வீடியோ.

இதுவரை இந்தியாவில் 433 கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர், 7 பேர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 10 பேருக்கு இதுவரை கோரோனோ பாதிப்பு கண்டு பிடிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடக்க்கப்பட்து. இதற்கு மக்களின் ஆதரவும் அதிகம் கிடைத்தது.

https://www.instagram.com/p/B-CxXpcnuW0/

இந்த நிலையில் தமிழ் நாட்டில் 3 மாவட்டங்களை உட்பட இந்தியாவில் உள்ள 75 மாவட்டங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு என்று மூன்று மாவட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற பலர் சொந்த ஊருக்கு திரும்ப முழித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியாக மணிமேகலை சமீபத்தில் கிராமத்திற்கு சென்றுள்ளார். இப்படி கொரோனா பாதிப்பால் பல்வேறு மாவட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சொந்த ஊரான சென்னைக்கு திரும்ப முடியாமல் இருக்கிறார் மணிமேகலை. இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் மணிமேகலை.

behindtalkies AMP · Quick view
View full