தவறி விழுந்த கலைஞர் தாங்கி பிடித்த தளபதி. வைரலாகும் வீடியோ.

0
13602
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for master audio launch

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் பட நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : அஜித்தை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாதுனு சொன்னாங்க-இயக்குனர் சொன்ன ரகசியம்.

-விளம்பரம்-

தளபதி விஜய்யின் படத்தை விட நடக்கும் ஆடியோ லான்ச் சர்ச்சைகள் தான் சோசியல் மீடியாவை வைரலாகி இருக்கிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தும் அதனுடைய பேச்சுக்கள் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தவறி விழுந்த கேமராமேன் ஒருவரை பதறியடித்து விஜய் அவர்கள் தூக்கியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை விஜய்யின் ரசிகர் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது விஜய் அவர்கள் அரங்கத்திற்குள் நுழையும் போது அங்கிருந்த கேமரா மேன் ஒருவர் கீழே தவறி விழுந்து உள்ளார். அப்போது தளபதி விஜய் அவர்கள் ஓடிப் போய் அவருக்கு உதவி செய்து உள்ளார். அங்கிருந்தவர்களும் அந்த கேமராமேனை தூக்கி விட்டார்கள். பின் விஜய் அவர்கள் அவரிடம் ஓகேவா என்று நலமும் விசாரித்திருக்கிறார்.

தற்போது இந்த காட்சியை விஜய் ரசிகர் ஒருவர் எடுத்து உள்ளார். தற்போது இதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இது காட்டுத் தீயாய் பரவி வருகிறது. மேலும், இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி கொஞ்சம் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement