Divorce , தலாக், தப்பான முடிவு – தன் திருமணத்தின் போது வநத கமெலண்டுகளுக்கு தற்போது பதிலடி கொடுத்த மணிமேகலை

0
570
mani
- Advertisement -

மதம் மாறி திருமணம் செய்து நாங்கள் எடுத்த முடிவு சரி தான் என்று தங்களுடைய திருமண நாள் அன்று பிரபல தொகுப்பாளினி போட்ட போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

-விளம்பரம்-

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வ்ருடமாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

- Advertisement -

தற்போது அவர்கள் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மணிமேகலை தங்களுடைய திருமண நாளை கொண்டாடி போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், திருமணம் செய்து கொண்டபோது சோசியல் மீடியாவில் இவர்களை குறித்து வந்த எதிர்ப்பு பதிவுகளை பகிர்ந்து பல கஷ்டங்களை கடந்து தான் நாங்கள் வந்தோம். பலரும் எங்களுக்கு சாபம் விட்டு திட்டி வாழ்த்தி இருந்தார்கள். ஆனால், நாங்கள் நன்றாக சந்தோசமாக இருக்கிறோம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இதே போல் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தன்னுடைய கணவருக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தார். பின் தங்களுடைய வீட்டில் மணிமேகலைஉசேன் சின்னதாக கேக் கட் பண்ணி கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். மேலும், உசேனும் தன் மனைவிக்கு திருமண வாழ்த்து கூறி போஸ்ட் போட்டு இருந்தார். தற்போது இந்த போஸ்ட் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement