இனி நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன் – மணிமேகலை பதிவால் ரசிகர்கள் ஏமாற்றம்.

0
919
manimegalai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.

- Advertisement -

2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

மணிமேகலையின் இந்த பதிவை கண்டு குக்கு வித் கோமளி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்துள்ளார்கள். குக்கு வித் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் கடந்திருக்கிறது. ஆனால், கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த சீசனில் முதல் எலிமினேஷன் ஆன கிஷோரின் எலிமினேஷன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த சீசனில் பாலா இல்லாததும் கொக்கு வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது மணிமேகலையும் வெளியேறி இருப்பது முக்கியத்துவம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

மணிமேகலையின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஏற்கனவே பாலா இல்லை என்பதால் இந்த சீசன் கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நீங்களும் சென்று விட்டால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் மீது கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனமும் தொடர்ந்து வருவதால் தான் மணிமேகலை இந்த முடிவை எடுத்தார் என்றும் கூறி வருகின்றனர்.

மற்றொருபுறம் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறார் என்னவோ அதனால் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்தாலும் நான்கு சீசன்களாக தவறாமல் இடம்பெற்றது மணிமேகலை மட்டும் தான். மேலும், பாலாவிற்கு பின்னர் காமெடியில் கலைக்கு வந்தவர் மணிமேகலை தான் தனக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு ஹோம் வொர்க் செய்து தன்னுடைய தனிப்பட்ட திறமை மூலம் காமெடியில் அசத்தி வந்தார். மணிமேகலை தற்போது எவரும் சென்று விட்டதால் நிகழ்ச்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது இவரது இடத்தில் இனி எந்த கோமாளி வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement