தமன்னா, ஹன்சிகாவை விட்டுவிட்டு குக்கு வித் கோமாளி பிரபலங்களை தேர்வு செய்த லெஜண்ட் – அதுவும் யார் பாருங்க.

0
610
Annachi
- Advertisement -

லெஜெண்ட் சரவணன் படத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள் நடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே ஒரு படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார்.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சரவணன் அருள் யூத் ஆக நடிக்கிறாராம். இதனால் சரவணன் அண்ணாச்சி அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சரவணன் அருள் நடிக்கும் படங்கள்:

மேலும், விஜய் நடித்து வரும் லியோ படத்தில் சரவணன் அருள் நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கள் நிலவி வருகிறது. ஆனால், இது குறித்து லியோ பட குழு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் இவரின் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அண்ணாச்சி கூலர்ஸ், மஞ்சள் நிற கோட், சூட் என்று எம்ஜிஆர் லுக்கில் படும் மாஸாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் உடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. அதாவது, லெஜெண்ட் சரவணன் தன்னுடைய கடைகளின் விளம்பர படங்களில் அவரே நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

அண்ணாச்சியுடன் குக் வித் கோமாளி பிரபலங்கள்:

இதற்கு முன்பு அவர் தமன்னா, ஹன்சிகா போன்ற பல முன்னணி நடிகைகள் உடன் சேர்ந்து விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பெற்ற ஸ்ருதிகா மற்றும் கோமாளி மணிமேகலை ஆகிய இருவருடன் நடித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தான் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சரவணன் அவர்களுடன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது எடுத்த புகைப்படம் தான் இது. சரவணன் அவர்கள் மிகவும் எளிமையானவர், அன்பானவர். அவருடன் படப்பிடிப்பில் நடித்தது ஜாலியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் என்னுடைய பைத்தியக்கார தோழி ஸ்ருதிகாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து பணிபுரிந்து இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement