சிவகார்த்திகேயன் செயலால் வருத்தப்பட்ட Don பட சீனியர் நடிங்கர் – ட்வீட்டில் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
469
don
- Advertisement -

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் செய்த செயலால் மனோ போட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர், என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

- Advertisement -
வாக்களிக்க முடியாமல் போன சிவகார்த்திகேயன்.! காரணத்தை கேட்டால் அதிர்ச்சி  ஆவீங்க.! - Tamil Behind Talkies

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் படத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

அயலான் படம் பற்றிய தகவல்:

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து படத்தின் இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார்.

டான் படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் படத்தில் ஜோடியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிவா காலேஜ் ஸ்டூடன்டாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ்,எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், டான் படத்திலும் சிவா ஒரு டூயட் பாடலை எழுதி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

மனோபாலா டீவ்ட்:

இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் டான் படக்குழுவை டேக் செய்து டுவிட் செய்து இருக்கிறார். ஆனால், அதில் படத்தில் நடித்துள்ள மனோபாலாவின் பெயரை டேக் செய்ய சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து மனோபாலா டீவ்ட் என்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னப்பா என் பேரு??? என்று போட்டு சிவகார்த்திகேயனின் டேக் பதிவை ஷேர் செய்து இருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement