மனோஜ் பாரதிராஜாவின் மனைவி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு செய்தி தான். சமீபத்தில் தான் இவர் இதய பிரச்சினை காரணமாக சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு இவர் ஓய்வு நிலையில் இருந்தார்.

பின் திடீரென்று நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்தார். தற்போது இவருக்கு 48 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் தான் பாரதிராஜாவினுடைய வீடு இருக்கிறது. அங்குதான் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி சடங்குகள் நடைபெற நடைபெற்று இருக்கிறது. பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.
மனோஜ் பாரதிராஜா மறைவு:
அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பருவமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மனைவி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மலையாள நடிகை நந்தனாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதுரியன் படத்தில் இருவருமே சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போது தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

மனோஜ் பாரதிராஜா மனைவி:
இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டருமே சம்மதம் கொடுத்ததால் கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்கள். இதை அடுத்து பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் செய்திருந்தார்கள். இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள். அதை அடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது. மூத்த மகள் பெயர் ஆர்த்திகா, இரண்டாவது மகள் மதிவதினி.

நந்தனா குறித்த தகவல்:
மேலும், நந்தனா திருமணத்திற்கு முன்பு தமிழ், மலையாளம் மொழியில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருமணமான பிறகு தான் இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். அதோடு இவர் தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை தான் கவனித்து வந்தார். மனோஜின் மூத்த மகள் ஆர்த்திகா இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு போராடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகள் ஆகவே இவர் ஒரு டாக்குமெண்டரி படத்தை இயக்கி தாத்தாவிடம் காண்பித்து பாராட்டையும் பெற்றிருந்தார். தற்போது மனோஜின் இரண்டாவது மகள் மதிவதினி கல்லூரியில் படித்துக் கொண்டு வருகிறார்.

மனோஜ் பாரதிராஜா திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ்மஹால் படத்தில் தான் நடிகன் ஆகி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்து இருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது.






