தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக மன்சூர் அலிகான் நடிகருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள்.

Advertisement

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார்.

தளபதி 67 படம்:

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே பேட்டியில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மன்சூர் அலிகானை வைத்து படம் பண்ணனும் என்றும், தன்னுடைய படத்தில் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும் கூறி இருந்தார். அதை தற்போது விஜய்யின் படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார் லோகேஷ்.

Advertisement

மன்சூர் அலிகான் நடிக்கும் படம்:

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்து கொண்டிருந்த மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த உடனேயே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதற்கான கதையை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜயிடம் கூறிவிட்டார்.

Advertisement

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

தற்போது விஜய்- மன்சூர் அலிகான் காம்போ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரித்திவிராஜ் என இரண்டு வில்லன்கள் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement