ரஜினியோட சிகிரெட் புடிக்கும் ஸ்டைலே அந்த நடிகரோடையது தான் – ரஜினி குறித்து ஓப்பனாக பேசிய மன்சூர்

0
1708
jailer
- Advertisement -

அவருடைய சிகரெட் ஸ்டைலே காப்பி தான் என்று ரஜினிகாந்தை வம்பு இழுத்து மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்தின் படு தோல்வியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் 500 கோடி மேல் வசூலில் நெருங்கி கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். அங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார்.

ரஜினியின் ஆன்மிகம் பயணம்:

பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். பின் ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்த்தார். பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

இதற்கு விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த், யோகிகள் என்னைவிட சிறு வயது ஆக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என்று பேசியிருந்தார். இருந்தாலும், அது குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினி குறித்து மன்சூர் அலிகான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது பேசும் பொருளாக இருக்கிறது. பேட்டியில், ரஜினி உண்மையிலேயே நல்ல மனிதர் தான். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். ஆனால், அவருடைய சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் சத்ரவன் சின்னா ஸ்டைல். அதை பார்த்து தான் அவர் செய்தார். அதெல்லாம் பிரச்சனை இல்லை.

ரஜினி குறித்து சொன்னது:

சமீப காலமாகவே ரஜினி பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்தை சேர்த்து வைப்பது வழக்கம். அதைப்போல தான் ரஜினிகாந்த்தும் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் கர்நாடகாவில் சேர்த்து இருக்கிறார். இவரை சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர் தமிழக மக்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ரஜினிகாந்த் பணக்காரர்கள் பக்கம் தான் இருக்கிறார். ஏழைகள் பக்கம் நிற்க மாட்டுகிறார். அரசியலில் அவர் ஒரு சுண்டைக்காய். சொல்ல போனால், ரஜினிகாந்த் சினிமாவில் தான் சூப்பர் ஸ்டார். அவர் நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும் தான் அவர் இடது சரியாக இருக்கிறார் என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

Advertisement