லியோ பூஜைல கூட உங்ககிட்ட இப்படி சொன்னேன் – திரிஷா குறித்த சர்ச்சை கருத்து குறித்து மன்சூர் அலிகான் விளக்கம்.

0
439
Mansoor
- Advertisement -

திரிஷா குறித்து தான் பேசிய கருத்திற்கு எதிர்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் பின்னர் சுயாட்சியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றார். பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சால் கடுப்பான திரிஷா ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும்.

-விளம்பரம்-

ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று படு ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுக்கா இல்ல என்கிற ஆதங்கத்தை காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன்னு எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிக்ளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. உலகத்திலே எத்தனையோ பிரச்சனை இருக்கு, பொழப்ப பாருங்கப்பா நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement