மன்சூர் அலிகான் எழுதி இசையமைத்த பாடல். ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் போங்க.

0
1830
Mansoor
- Advertisement -

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்திருக்கும் பக்தி பாடல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

- Advertisement -

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கிக். இந்த படத்தில் கதாநாயகன் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கிருந்தார். இந்த படத்தில் டான்யா, கோவை சரளா, செந்தில், தம்பி ராமையா, பிரம்மாண்டம், வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை நவீன் ராஜ் தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கல்யாண விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

லியோ படம்:

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து இயக்கும் “லியோ” என்ற படத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சரக்கு படம்:

அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

மன்சூர் அலிகான் பாடிய பாடல்:

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார்.
தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். அதோடு மன்சூர் அலிகானின் பக்தி பாடலுக்காக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்

Advertisement