பிக் பாஸ் ஒரு பைத்தியக்கார வீடு.! பிக் பாஸ் 100 நாள் வேலை திட்டம்.! பிரபல நடிகர் அதிரடி.!

0
1445
Bigg-Boss
- Advertisement -

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கியது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு இதன் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மாறாக பல முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

-விளம்பரம்-

bigg boss

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற வரும் பல அநாகரீக செயலை மக்கள் கண்டித்து வரும் நிலையில் பிரபல தமிழ் சினிமா வில்லன் நடிகர் மன்சூரலிகான் பிக் பாஸ் ஒரு பைத்தியக்கார வீடு என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் மன்சூரலிகான் திரைப்பட வெளியிட்டு விழாவில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மன்சூரில்கான் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசுகையில், பிக் பாஸ் ஒரு பைத்தியக்காரர்கள் வாழும் வீடு, அதில் இருபவ்ரகள் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டம் போல ஒரு வேலையை கொடுத்துள்ளார்கள்.

-விளம்பரம்-

Mansoor Ali Khan

7 ஆண்கள் 7 பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், அவர்கள் செய்யும் செயல்களை காட்ட 30 கேமரா மூலம் படம் போட்டு காட்டும் உங்களால், மக்கள் பல போராட்டங்களில் கொல்லப்பட்டார்களே அப்போது ஏன் ஒரு கேமராவை கூட கொண்டு சென்று அதனை படம்பிடிக்க முடியவில்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கியுள்ளார்.அதுமட்டும் இன்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் ஆபாசமாக உள்ளது.சிறு குழந்தைகளை ஆபாசப்பாடலுக்கு ஆட விடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்

Advertisement