தம்மா துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு – வாய்ப்பு கொடுத்தவர் என்றும் பாராமல், லோகேஷை வச்சி செய்த மன்சூர் அலிகான்.

0
508
Mansoor
- Advertisement -

போருக்கு போகலாம் லோகேஷ் என்று மன்சூர் அலிகான் வம்பு இழுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிக். இந்த படத்தில் கதாநாயகன் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கிருந்தார்.

- Advertisement -

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

இந்த படத்தில் டான்யா, கோவை சரளா, செந்தில், தம்பி ராமையா, பிரம்மாண்டம், வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடியும், நான்கு நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இனி வரும் நாட்களில் லியோ படம் மிக பெரிய விழாவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ் வா நம்ம பாலஸ்தீனத்க்கு போகலாம்.

mansoor

லோகேஷ் குறித்து சொன்னது:

500 கோடி முதல் போட்டு படம் எடுத்து ஆயிரம் கோடிக்கு உழைக்கிறோம். ஆனால், அரசியல்வாதிகள் கையெழுத்து போட்டு அசால்டாக பத்தாயிரம் கோடி ஆட்டையை போடுகிறான். லோகேஷ் என்னை வச்சு அந்த மாதிரி அரசியல் படம் எடுக்கலாம்ல. தம்மா துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு. இல்லைன்னா வாங்க பாலஸ்தீனத்துக்கு போருக்கு போகலாம். 500 மிலிட்டரி டேங்கர் கொண்டுட்டு வாங்க போருக்கு போகலாம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement