விஜயின் அரசியல் குறித்து மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த செயலை பார்த்து அரசியல் பிரபலங்கள் கதிகலங்கி இருக்கிறார்கள்.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். பின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

லியோ படம்:

இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி விஜய் பொது சேவையில் கவனத்தை செலுத்தி வந்தாலும் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் விஜயின் அரசியல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில், விஜயின் லியோ பட இசை வெளியீட்டு விழா மதுரையிலா? சென்னையிலா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு மன்சூரலிகான், சந்திராயன் நிலவில் நடக்க இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Advertisement

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அதற்குப்பின் விஜய்யின் அரசியல் குறித்து கேட்டதற்கு, வந்தால் நன்றாகத் தான் இருக்கும். அதற்காக தான் நானும் இருக்கிறேன். இங்கு யாரும் வரக்கூடாது என்று சொல்ல முடியாது. அவர் அரசியல் வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு பிடிக்கலையா? சம்பாதிக்கிறார் பண்ணுறாரு. மக்களுக்கு அவர் செய்றாரு. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? பண்ண நல்லது தானே என்று கூறியிருக்கிறார்.

Advertisement