கமலின் தக் லைப் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். கடந்த வாரம் கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது.
தக் லைப் படம்:
இருந்தாலுமே முதல் நாளே இந்த படம் படும் மோசமான விமர்சனங்களை தான் குவித்தது. கமல் ரசிகர்களே இந்த படத்தை திட்டி இருந்தார்கள். இந்த படம் இந்தியன் 2வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு இந்த படம் மிக மோசமான வசூலை குவித்து இருக்கிறது என்றெல்லாம் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தக் லைப் படத்தினுடைய தோல்விக்கான காரணம் குறித்து மன்சூர் அலிகான் வெளிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மன்சூர் அலிகான் வீடியோ:
அதில் அவர், ஏ ஆர் ரகுமான் பாடல்கள் எப்போதுமே பக்தி நிரம்பி இருக்கும். அவருடைய பாடல்களில் இறையருள் இருக்கும். அதற்க்காக நான் பக்திமான் கிடையாது. ஆனால், ஏ.ஆர் ரகுமான் பக்தி மானாக இருப்பதால் தான் அவருடைய பாடல்களில் இறையருள் இருப்பதை பார்க்க முடிகிறது. காரணம், எல்லா புகழும் இறைவனுக்கே, அல்லாஹ் ஒருவன் என்ற பாடலைப் போலவே எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்ற பாடலை ரகுமான் உருவாக்கி இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தப் பாட்டு இருந்திருந்தால், 'தக் லைஃப்' நல்லா ஓடியிருக்கும் என்கிறார் மன்சூர் அலிகான்!@GovindarajPro pic.twitter.com/vDrSDxkfa7
— SpiralNewsDevi (@SpiralnewsDevi) June 12, 2025
படம் பற்றிய விமர்சனம்:
அதேபோல தக் லைப் திரைப்படத்திலும் இறை பாடலின் சந்தம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. 'லா இலாஹா இல்லல்லாஹு லா இலாஹா இல்லல்லாஹுவில் இன்பம் கொள் நெஞ்சமே தூய கலிமா அதனை தினமும் ஓதுவாய் நெஞ்சமே' என்ற பாடலைப் போன்று தான் காலை கனவிலே காதல் கொண்டேன் என்ற பாடலோட சந்தமும் இடம்பெற்று இருக்கிறது. இது ஏ.ஆர் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது அவருக்கு இருக்கும் இறை அருளை காட்டுகிறது. அவர் இசையமைக்கும் படங்களில் நான் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே இருக்கும்.
தோல்விக்கான காரணம்:
மேலும், ஏ.ஆர் ரகுமான் எப்போது போலவே அவருடைய சிறந்த படைப்புகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அத்தகைய ரகுமானின் உடைய பாடல் தக் லைப் படத்தில் இடம்பெறாது தான் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாததற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். முத்த மழை பாடல் மட்டும் படத்தில் வந்திருந்தால் கண்டிப்பாக தக் லைப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்று ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.






