'தல ரசிகர்களே இது உங்களுக்காக' - அஜித்தை சந்தித்தது குறித்து சாதனை பெண் போட்ட பதிவு.

By Rajkumar · 24/9/2021

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். காரை விட இவருக்கு பைக் தான் மிகவும் பிடித்த விஷயம். அஜித்திற்கு நடிப்பை தான் பைக் ரைட் என்றால் மிகவும் பிரியம். வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து. ஆனால், உடனடியாக இந்தியா திரும்பாமல் ரஸ்யாவில் சில நாட்கள் தங்கி பைக் மூலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் நடிகர் அஜித் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்தார் என்றும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து இந்தியா திரும்பிய அஜித் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பைக் ஷோவில் கலந்து கொண்டார். சமீபத்தில் நடிகர் அஜித் டெல்லியில் ஒரு பெண்ணுடன் எடுத்த புகைப்படம் வைரலானது. அந்த பெண் யார் என்று பலரும் தேடினர். அவர் பெயர் மேரல் யாஸர்லூ. ஈரானைச் சேர்ந்த இவர் ரு ஃபேஷன் டிசைனர்.சூப்பர் பைக்கில் உலகம் முழுதும் சுற்றிய ஒரு சாதனை பெண். இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யசார்லூ 1,10,000 கிமீ பைக்கை சோலோவாக ஓட்டிய சாதனை பெண்.

இதையும் பாருங்க : அப்பாவான கார்த்தியை தொடர்ந்து குட் நியூஸ் சொன்ன NINI சீரியல் பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து.

இப்படி ஒரு நிலையில் இவர் இந்தியா வந்துள்ளார். அந்த சமயத்தில் அஜித்தும் டெல்லியில் இருந்துள்ளார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இவரை சந்தித்து பேசியுள்ளார். இப்படி ஒரு நிலையில் அஜித் சந்தித்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேரல் யாஸர்லூ.

அதில், Bmw MotoRd என்னை தொடர்பு கொண்டு உங்களை ஒரு சக ஓட்டுனர் சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னார்கள். அவர் தான் அஜித், என்னுடைய ஒர்லடு டூர் அனுபவம் மற்றும் தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் மெசேஜ் செய்து கொண்டு இருவரும் சந்திக்க ஒரு நேரத்தை முடிவு செய்தோம்.

அவர் தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியவந்தது. ஆனால், அவர் எந்த அளவிற்கு நேசிக்கப்படுகிறார் என்பது அவருடன் எடுத்த அந்த போட்டோ வைரலானது வரை எனக்கு தெரியாது.ஒருவரின் தொழிலை வைத்து பிறரை நான் மதிப்பிட மாட்டேன். ஒரு மனிதனாக நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தான் நான் பார்ப்பேன்.

தல ரசிகர்களே உங்களுக்காக இதை சொல்கிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகருடன் என் அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் பண்பாகவும், அடக்கமாகவும், மரியாதையுடனும், மென்மையாகவும் பேசும் ஒரு சிறந்த மனிதர்.அவரை ஒரு நடிகராக தெரிந்து கொண்டதை விட அவரை ஒரு நல்ல மனிதராக தெரிந்து கொண்டது மகிழ்ச்சி.

அவர் எந்த வித சமூக வலைதளத்திலும் இல்லை. இதன் மூலமே அவரது தனிப்பட்ட விஷயங்களை நாம் மதிக்க வேண்டும். இந்த புகைப்படங்கள் கூட அவரது அனுமதியோடு தான் பகிரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full