அப்பாவான கார்த்தியை தொடர்ந்து குட் நியூஸ் சொன்ன NINI சீரியல் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து.

0
11114
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் , இந்த தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதா ஹரிஹரன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : சூப்பர் மாடலாக சவடால் போட்டுகொண்டு சிறைக்கு சென்று, சூம்பி போன மாடலாக வெளியில் வந்த மீரா – வீடியோ இதோ.

- Advertisement -

நடிகை வனிதா ஹரிஹரன் தமிழில் தெய்வமகள், பகல் நிலவு, ரோஜா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான். வனிதா ஹரிஹரன் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த தொடரில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஷ்மிக்கு திருமணம் முடிந்தது. அதே போல இதே தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்த சசிந்தருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement