மாமன்னன் படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து மாரி செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

Advertisement

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இன்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன்.

படம் குறித்த தகவல்:

இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். மேலும், இன்று மாமன்னன் படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்களில் வெடி வைத்தும் ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தை பார்த்த கமல்,தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாமன்னன் பட குழுவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement

மாரி செல்வராஜ் அளித்த பேட்டி:

அது மட்டும் இல்லாமல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து கூறியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கில் மாரி செல்வராஜ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படம் எனக்கு ரொம்ப எமோஷன். நிச்சயம் ஒரு நல்ல படமாகவும் முக்கிய படமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisement

படம் குறித்து சொன்னது:

அதன் நோக்கத்தையும் தேவையும் கண்டிப்பாக இந்த படம் பூர்த்தி செய்யும். சர்ச்சைகளுக்கும் இந்த படம் பதில் சொல்லும். மக்கள் மனதை இந்த படம் வெல்லும் என்று நம்புகிறேன். மக்கள் கருத்து தான் நிஜமானது. உதயநிதி அவருடைய கடைசி படம் என்று தான் என்னை அழைத்திருந்தார். அவர் எதற்காக என்னை அழைத்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த படம் நல்ல ஒரு படமாக அமைந்திருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement