மாமன்னன் படத்தால் லீக்கான மாரிசெல்வராஜின் போன் நம்பர் மற்றும் Whats App Dp – படத்துல இத நோட் பன்னீங்களா ?

0
2212
Mariselvaraj
- Advertisement -

மாமன்னன் திரைப்படத்தில் நடிகை செய்த தவறால் இயக்குனர் மாரி செல்வ ராஜின் போன் நம்பர் சமூக வலைதளத்தில் லீக் ஆகி இருப்பதோடு அவரின் whatsapp புகைப்படம் வரை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும்.

-விளம்பரம்-

படத்தால் லீக்கான நம்பர் :

அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் எந்த படத்தின் மூலம் இயக்குனர் மாரியே செல்வராஜ் அவர்களின் போன் நம்பரும் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

மாரி செல்வராஜின் வாட்ஸ் அப் Dp :

இந்த படத்தின் ஒரு காட்சியில் வடிவேலுக்கு சொந்தமான இடத்தில் கீர்த்தி சுரேஷ் பாடசாலையை நடத்தி வருவார். அப்போது அங்கே பகத் பாஸிலின் அடியாட்கள் வந்து இடத்தை நொறுக்கி விடுவார்கள். இதனை அறிந்த உதயநிதியின் அம்மா உதயநிதிக்கு ஃபோன் செய்வார். அப்போது அந்த போனில் மாரி செல்வராஜன் செல்போன் நம்பர் உட்பட இதர படக்குழுவின் போன் நம்பர்களும் தெள்ளத் தெளிவாக தெரிந்து இருக்கிறது. இதனை நோட் செய்த நெட்டிசன்கள் பலரும் இது மாரி செல்வராஜ் நம்பர் தானா என்று இணையத்தில் தேடி உறுதி செய்ததோடு அவரின் whatsapp டிபி வரை தோண்டி எடுத்து லீக் செய்து வருகிறார்கள்.

Advertisement