படுக்கைக்கு அழைத்த நபர் – மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்.

0
19908
soundarya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் என்ற பாட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சிரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இவர் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் நடித்த yours shamefully ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது பாடகி சௌந்தர்யா நடிகையாக வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார். இறுதியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இவருக்கு கிடைத்தது ஒரு செகண்ட் வந்து செல்லும் ரோல் தான்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் உடையில் கடற்கரையில் சித்தி 2 சீரியல் நடிகை நடத்திய போட்டோஷூட்.

- Advertisement -

அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அப்போது இவர் முகேனுடன் சேர்ந்து ‘சத்தியமா சொல்லுறேண்டி’ பாடலை பாடியது பெரும் பிரபலமானது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இவர் தனக்கு இன்ஸ்டாக்ராமில் ஆபாசமாக மெசேஜ் செய்தவரின் மெசேஜை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த நபர், இவரை படுக்கைக்கு அழைத்துள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சௌந்தர்யா அந்த நபரை பிளாக் செய்துள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் இதே நபர் தொடரும் கணக்குகளையும் பிளாக் செய்யும் ஆப்ஷன் இருப்பதை கூறி இது மிகவும் பயனுள்ள ஆப்ஷன் தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement