மாஸ்டர் படத்தின் டெலீடட் காட்சி 1992ஆம் வந்த இந்த படத்தின் காப்பியா ? அதான் தூக்கிட்டாங்களா ? வீடியோ இதோ.

0
1991
master
- Advertisement -

விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும்.

-விளம்பரம்-

அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : போன் பண்ணா எடுக்கலன்னு சொன்னாங்க – இப்போ ஆரி நேரா அவர் வீட்டுக்கே போயிருக்காரு. புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இந்த காட்சி கமல் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘நம்மவர் ‘ படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் சில ஆதரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த திரைப்படம் நம்மவர் படத்தின் தழுவல் என்றும் கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது தான். மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார்.

விஜய் குடிக்கு அடிமையாக காரணம் பற்றி நடிகர் நாசர், நாயகியான மாளவிகா மோகனனிடம் கூறும் போது, Vc செல்வம் தான் Jdயை இப்படி குடிக்கு அடிமையாக காரணம். அவருக்கு புற்று நோய் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் தான் Jd இப்படி தூங்க முடியாமல் குடிக்கு அடிமையாகிவிட்டான் என்று கூறுவார். நாசர், Vc செல்வம் என்று குறிப்பிட்டது ‘நம்மவர்’ படத்தில் கமலின் பெயர். மேலும், அந்த படத்தில் அவருக்கு புற்று நோய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் 1:02 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதனால் Jd, ப்ரொபஸர் செல்வத்தின் மாணவர் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமித்துள்ளதாவது, நம்மவர் படத்தில் கல்லூரியை திருத்துவது தான் கதையாக இருக்கும், ஆனால்,ப்ரபசர் என்ற கதாபாத்திரத்தை எழுத உந்துகோளாக இருந்தது ‘நம்மவர் ‘ தான். அதனால் தான் செல்வம் கதாபாத்திரத்தை ஏதோ ஒரு இடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்கு தான் நாசர் சொன்ன அந்த கதை என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்க்கது.

Advertisement